பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 151 என்று குறிக்கவே அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி’ என்றும், மனைத்தவம் புரிந்தார் என்றும் கவிஞர் பாடுகிறார். இதுவே பொருள் என்பதைப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். தம்பியார் மாறியும் தம் நிலைமாறாமை எந்தத் தம்பிக்காக உம்பர் உலகு அணையாமல் இம்பர் மனைத்தவம் மேற்கொண்டாரோ அந்தத் தம்பி வேற்றுச் சமயம் புகுந்துவிட்டார். தம்பிக்காக மட்டும் வாழ்ந்திருப்பின் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மனமுடைந்து உயிர் நீத்திருப்பார். அல்லது தம்பியை அழைத்துத் தன் மன உளைச்சலை வெளியிட் டிருப்பார். திலகவதியார் அவ்வாறு செய்யவில்லை. இறைவனிடம் முறையிட்டுவிட்டுத் தாம் மேற் கொண்ட ஆலயப் பணியினை விடாது செய்து வந்தார். இதிலிருந்தே அன்புடைமையின் மேம்பட்ட அருளுடைமையில் திலகவதியார் நிலைபெற்று விட்டார் என்பதை அறியமுடிகிறது. ஒரே தம்பியார் தம்மை விட்டு அகன்றபின், திருவாமூரில் இருந்து புறப்பட்டுச் சென்று, கெடில நதிக்கரையில் உறையும் அதிகை வீரட்டானரை நண்ணி, திருக்கோவிலில் பணிபுரியும் பணியை மேற் கொண்டார் திலகவதியார் என்று சேக்கிழார் இதோ கூறுகிறார்: