பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சேக்கிழார் தந்த செல்வம். "புலர்வதன்முன் திருஅலகு பணிமாறிப் புனிறுஅகன்ற நலம்மலிஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கு இட்டு, மலர்கொய்து கொடுவந்து, மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.” (பெ. பு-1314) கோயில் திருப்பணி : சமுதாயப் பணி - இப்பாடல்மூலம் இறையன்பின் அடிப்படையில் இத்தொண்டு செய்யப்படுகிறது என்பதைமட்டும் அல்லாமல், மற்றொரு கருத்தையும் சேக்கிழார் குறிக்கிறார். திருக்கோயில் பணிகளில் மிக முக்கியமானது திருக்கோயிலைக் கூட்டித் துப்புரவு செய்வதும், பசுஞ்சாணத்தால் மெழுகுவதும் ஆகும். அக்காலத்தில் கோயில் முழுவதும், பிராகாரம் உள்பட மண்தரையாக இருந்ததேதவிர, இக்காலம் போலப் கருங்கல்லால் தளவரிசை இடப்படவில்லை. அன்றியும், அன்றாடம் நூற்றுக் கணக்கானவர்கள் திருக்கோயிலுக்கு வந்து, பிராகாரம் வலம் வந்து கருவறைவரை சென்று நின்று இறைவனை வழிபட்டுச் செல்வது மரபாகும். எனவே, சுற்றுப் புறமும் தரையும் மாசுபடுதல் இயல்பே ஆகும். அதனைப் போக்க அலகிடுதலும் சாணத்தால் மெழுகுதலும் தேவைப்பட்டன. பூமியில் உள்ள மாசைக் கழிக்க இவை இரண்டும் போதுமானவை என்றாலும், பலர் கூடி மூன்று புறம் அடைக்கப் பட்ட கருவறையில் நின்று வழிபடும்பொழுது