பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 153 அவர்கள் மூச்சுக் காற்றால் காற்றில் மாசு ஏற்படுவது இயல்பு. இந்த மாசைப் போக்க நம்முடைய முன்னோர் கண்ட ஒப்பற்ற புதுமை-சாம்பிராணி, குங்கிலியம், சூடம் என்பவையாகும். மிகப் பழங் காலம்தொட்டே திருக்கோயில்களில் மூன்றையும் பயன்படுத்திவந்தனர். அடைபட்ட இடத்தில் ஏற்பட்ட காற்று மாசைப் போக்க இவை மூன்றும் மிகச் சிறந்த பொருட்களாகும். இவற்றுள்ளும் சாம்பிராணி முதலிடத்தையும் குங்கிலியம் இரண்டாவது இடத்தையும் சூடம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. சாம்பிராணி போன்ற காற்று மாசு நீக்கியைக் காண்பது இன்றும் அரிதாகும். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு தான் திருக்கோயிலில் அலகிடுதல், மெழுகிடுதல், குங்கிலியம் இடுதல் ஆகிய பணிகளை இறை பணியாகவே கருதி நம் முன்னோர் செய்துவந்தனர். மக்கட்குச் செய்த தொண்டே மகேசன் தொண்டு என்பதைத் திலகவதியார் நன்கு அறிந்திருந்தார் ஆதலின் அனைத்து உயிர்க்கும் அருள் தாங்குவதற்குத் திருக்கோவில் பணி சிறந்தது எனத் தேர்ந்தெடுத்த காரணம் முன்பின் தெரியாத பலரும் கோயிலுக்கு வருவதால், மகேசனுக்குச் செய்யும் இப்பணி, அனைத்துயிர்க்கும் செய்யும் பணியாக அமைந்து இருப்பதைக் காணலாம்.