பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சேக்கிழார் தந்த செல்வம் 'கா வளர்த்தல் என்பது சோலைகளை வளர்த்தல் என்றும் குளம் தொட்டு’ என்பது குளம் வெட்டுதல் என்றும் பொருள்படும். தமிழ் நாட்டில் என்று முள்ள நீர்ப்பஞ்சம் குளம்வெட்டுதலால் ஒரளவு போக்கப்படும். என்பதைப் புறநானூற்றுக்காலம்முதல் நாவரசர் காலம்வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளால் அறிகிறோம். "நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளா தோரிவண் தள்ளாதோரே' (புறம்-18) என்ற புறப்பாடலால் குளம் வெட்டுதலைச் சங்க காலத்திலேயே சிறந்த தொண்டாகக் கருதினர் என்று அறிய முடிகிறது. அதையே தொடர்ந்து நாவரசரும் செய்தார் என்று அறிகிறோம். மிக்க இளம் வயதினராயினும், அடக்கி ஆளும் தாய் தந்தை இல்லாதபோதும், பெற்ற பெருஞ்செல்வத்தை மருள் நீக்கியார் எவ்வாறு செலவிட்டார் என்பது, தான் தோன்றிகளாகத் திரியும் இக்கால மேட்டுக்குடி இளைஞர்கட்கு நல்ல படிப்பினையை நல்கும். பொதுவாக, செல்வக்குடியில் பிறந்த இளைஞர்கள் இளமையிலேயே தாய், தந்தையரை இழந்துவிட்டால் அப்பெருஞ்செல்வமே அவர்கட்குப் பகையாகி அவர்கள் அழிவிற்குக் காரணமாகின்றது. அத்தகையோரும் மருள்நீக்கியார் வாழ்க்கை அறியப்