பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 157 படவேண்டியதாகும். செல்வக் குடியில் பிறந்தவர்கள் கல்வி கற்பது குறைவுதான். ஆனால், மருள்நீக்கியார் எங்ங்ணம் கற்றார் என்பதை இதோ சேக்கிழார் கூறுகிறார்! பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயிலத் தொடங்குவித்தார்.” (பெ. பு-1290) பெருஞ்செல்வர்கள்கூட ஆடம்பரங்களுக்குச் செலவு செய்வதுபோலத் தம் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடுவது இல்லை. இதனெதிராக மருள்நீக்கியார் குடும்பம், பொருள் நீத்தம் கொள வீசினார்கள் என்பதால், கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களுக்கு வேண்டுமான பொருள் உதவி செய்தார்கள் என்பதையும் சேக்கிழார் வருணிக்கிறார். ஒரு பிடிப்பு இல்லை இதனை அடுத்து, மருள் நீக்கியார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பெரு நிகழ்ச்சி சிந்தனைக்குரியதாகும். செல்வக் குடியில் பிறந்திருப்பினும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு. இல்லாமல், அமைதியற்று வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. இதனைக் கூறவந்த சேக்கிழார், மருள் நீக்கியார், - -