பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158. சேக்கிழார் தந்த செல்வம் நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறந்துறந்து (பெயு-1307) வேற்றுச் சமயம் புகுந்தார் என்று கூறுகிறார். பெருஞ் செல்வத்தில் வாழ்ந்தாலும் வாழ்க்கை நிலையாமை பற்றியும், தாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் மருள்நீக்கியார் மனத்தில் ஒரு போராட்டமே நிகழ்ந்தது என்பதை மேலே காட்டிய வரிகள் அறிவிக்கின்றன. இப்போராட்டத்திற்குக் காரணம் அவருடைய இளமை வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த இறப்புக்களே ஆகும். மிகக் குறுகிய காலத்தில் பெற்றோர்கள், தமக்கைக்கு வரிக்கப்பட்ட கணவர் ஆகிய மூவரும் அடுத்தடுத்து இறந்தது மருள்நீக்கியார் மனத்தில் நிலையாமைபற்றி நினைக்க இடமளித்தது. எத்துணைச் செல்வம் இருப்பினும் இறப்பு முதலிய துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார். தாம் பிறந்து வளர்ந்த சமயத்தில் அமைதி கிட்டவில்லை. ஆதலால், வேற்றுச் சமயம் புகுந்தார் என்று தெரிகின்றது. பல ஆண்டுகள் அங்குத் தங்கி, பாலிமொழியையும் கற்று கணிக வாதம் பேசும் பெளத்தர்களை வாதில் வென்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. என்றாலும், என்ன ! அவர் - தேடிப்போன அமைதி அங்கேயும் கிடைப்பதாகத் தெரியவில்லை. எனவே,