பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சேக்கிழார் தந்த செல்வம் தாமகாததாத தததுவம் இந்நிலையில் முற்கூறப்பட்ட வரலாற்றுப் பகுதியில் இரண்டு நிகழ்ச்சிகளைப்பற்றிச் சிந்திப்பது நலம். இந்த நூற்றாண்டில் செல்வம் உடையவர்கள் அந்தச் செல்வத்தைப்பற்றி என்ன நினைக்க வேண்டும், அதனை எவ்வாறு செலவிட வேண்டும் என்பன பற்றியெல்லாம் விரிவாகப் பேசிய மகாத்மா காந்தி, இதற்குத் தர்மகர்த்தாத் தத்துவம் (rusleeship Concept) என்று பெயரிட்டார். ஒருவன் எவ்வளவு சம்பாதித்தாலும் அது தன்னுடைய உழைப்பால் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பிற மக்களின் உழைப்பும் அதில் உள்ளது என்பதை மறக்கக்கூடாது, எனவே, வருகின்ற ஊதியம் உழைத்த அனைவருக்கும் பொதுவானதாகும். அனைவரும் தனித்தனியே வருகின்ற ஊதியத்தைப் பங்கிட்டுக்கொண்டால், பொதுவான நன்மை எதையும் செய்யமுடியாது. அதற்காகத்தான் ஒரு தனிமனிதன் அவர்கள் உழைப்புக்கு ஒரு பகுதியைக் கூலியாகத் தந்துவிட்டு, எஞ்சியதைச் சேர்த்துவைக்கின்றான். அதன்ாலேயே அவன் செல்வன் என்று அழைக்கப்படுகின்றான். ஆனால், இந்தச் செல்வம் பிறருடையது, அவர் கட்கு நன்மை செய்வதற்காகவே தன்பால் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை அவன் மறத்த லாகாது. பெரும்பொருளை நிர்வகிப்பது ஒருவர் இருவரால்தான் செய்யமுடியுமே தவிர, பலர் ஒன்று சேர்ந்து செய்ய முடியாது.