பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 163 மணியும், பவணந்தியார் வழங்கிய நன்னூலும் சமணர்கள் தமிழுக்குத் தந்த கொடையாகும். அப்படியானால், 6ஆம் நூற்றாண்டில் இத்தகைய சமணர்களோடு திருநாவுக்கரசர் மாறுபட்டார் என்று சொல்வது அர்த்தமற்றதாகும். இந்த அடிப்படையில் வரலாற்றை ஆய்ந்தால் ஒர் உண்மை விளங்கும். கி.பி. 3ஆம் நூற்றாண்டுவாக்கில், எருமைநாடு என்று அன்று அழைக்கப்பட்ட மைசூர்ப் பிராந்தியத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார், சத்தியமங்கலம், கோவைவழியாகத் தமிழகத்தில் புகுந்தனர். அங்கிருந்து இரண்டு பிரிவாகப் பிரிந்து, ஒரு பகுதி கிழக்கு நோக்கி வந்து பல்லவ நாட்டையும், ஒரு பகுதி தெற்கு நோக்கிச் சென்று பாண்டிய நாட்டையும் கைப்பற்றினர். இவர்கள் கொள்ளைக் கூட்டத்தினர். இவர்களைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார், மூர்த்தி நாயனார் புராணத்தில், "கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னவன் வலிந்து நிலம் கொள்வானாய்"(பெ.பு.-983) மதுரையைப் பிடித்தான் என்று கூறுகிறார். பெயரளவில் இவர்கள் சமணர்களே தவிரச், சமண சமயக் கொள்கைகட்கும் இவர்கட்கும் வெகுதூரம் கொள்ளை அடிப்பதும் போரிடுவதுமே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட இவர்கள் சமணம் என்ற போர்வையில் வாழ்ந்தவர்களேதவிர உண்மைச் சமணர்கள் அல்லர். இவர்கள் பல்லவ நாட்டையும், பாண்டிய நாட்டையும் கைப் பற்றினாலும் மக்கள் தொடர்பில்லாதவர்கள். எந்த நாட்டிலும் உள்ளூரில் தங்கி மக்களோடு பழகி