பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சேக்கிழார் தந்த செல்வம் வாழ்ந்ததாக ஒரு குறிப்பும் இல்லை. முதலாவது, இவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள். தமிழ் மொழியைப் புறக்கணிப்பவர்கள். இரண்டாவது, சமணக் கொள்கைகளைப் போற்றி நடவாமல் அச்சமயப் பெயரைமட்டும் வைத்துக் கொண்டு, அரசர்களைத் தம்வசப்படுத்தி மறைவில் நின்று அதிகாரம் செலுத்தினர். ஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை இவர்கள் தம்வசத்தில் வைத்திருந்தாலும் மதுரை நகருக்குள் வாழமுடியாமல், ஆனைமாமலை போன்ற மலைகளிலும் குகைகளிலும் வசித்து வந்தனர். ஞானசம்பந்தர் வாதஞ்செய்தது இந்தக் களப்பிரர்களுடனேயே அன்றித், தமிழ்ச் சமணர்களிடம் அன்று. தமிழ்ச் சமணர்கள் சங்ககாலம்தொட்டே பரவி வாழ்ந்தார்கள். தமிழ்மொழிமாட்டுப்-பேரன்புடையவர் களும் அமைதியாக ஏனைய சைவ, வைணவர் களோடு சேர்ந்து வாழ்பவர்களுமாகிய இவர்களுடன் திருஞானசம்பந்தர் திடீரென்று வாதஞ்செய்யக் காரணமேயில்லை. நாவரசர் காலத்தில் வாழ்ந்த மகேந்திரவர்மன் என்ற பல்லவன் இவர்கள் பிடியில் இருந்த காரணத்தால் நாவரசருக்குத் தீங்கிழைத்தான். இறுதியாகச் சொல்லவேண்டுமானால், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியவர்களுடன் மலைந்தவர்கள் களப்பிரரே அன்றித், தமிழ்ச் சமணர்கள் அல்லர் என்பதை அறிந்துகொள்ள