பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சேக்கிழார் தந்த செல்வம் "வஞ்சனை பால்சோறுஆக்கி, வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே' (திருமுறை-4-70-5) "கல்லினோடு எனைப்பூட்டி அமண் கையர் ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே' (திருமுறை-5-72-7) இவ்விரு பாடல்களும் தமக்கிழைக்கப்பெற்ற கொடுமைகளை நினைந்து பேசும் அப்பெருமானு டைய வாக்கில் ஒரு கடுஞ்சொல்கூட வரவில்லை என்பதை அறியவேண்டும். இவ்விரண்டு பாடல் களையும் வைத்துக்கொண்டே இச்செயல் செய்தவர் கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ச் சமணர்கள் அல்லர் என்பது நன்கு விளங்கும். எந்தத் தமிழனும் செய்ய ஒருப்படாத இச்செயலை அஹிம்சையை உயிராகக் கொண்டு வாழ்ந்த தமிழ்ச் சமணர் ஒரு நாளும் செய்திருக்க முடியாது. அன்றியும், தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழ்ச் சமணர் எண்ணிக்கையால் மிகக் குறைவானவர்கள். போரை மனத்திலும் விரும்பாதவர்களால் அவர்களிடம் படைபலமோ, அரசனைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் தந்திரமோ ஒரு நாளும் இருந்திருக்க முடியாது. மகேந்திரவர்மன், நின்றசீர்நெடுமாறன் என்பவர்கள் சாதாரணமான சிற்றரரசர்கள் அல்லர், பேரரசர்கள். இவர்களை வசப்