பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 167 படுத்திய கூட்டம், மைசூர்ப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்களே ஆவர். தமிழர்களைப் பொறுத்த மட்டில் பண்டுதொட்டே ஒரு குறை இருந்துவந்தது என்பதைத் தமிழ் இலக்கியங்களை நன்கு பயில்வார் அறியமுடியும். தம்முடைய நாட்டில் உள்ளவர்களை மதிப்பதைவிட, வந்தேறிகளிடம் அதிக அக்கறை செலுத்தினர். இந்நாட்டுச் சமயங்கள் சைவமாயினும், வைணவம் ஆயினும் வேள்விகள் முதலியவற்றிற்கு அதிக மதிப்புத் தரவில்லை. பரிபாடல், திருமுரு காற்றுப்படை என்பவை பக்தியையே பெரிதாக மதித்துப் பேசின. அப்படியிருந்தும், வடக்கிலிருந்து வந்த வேத, வைதிகர்கள் புரியாத மொழியில் வேள்விகள் செய்யத் தொடங்கியவுடன் தமிழ் மன்னர்களில் சிலர், அதில் அதிக ஈடுபாடு காட்டினர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்போர் வேள்விகள் செய்வதைப் பெருமையாகக் கருதித் தங்கள் பெயருக்கு முன்னர், அந்த வேள்விகளின் பெயர்களையே சூட்டிக்கொண்டனர். இடைக் காலச் சோழர்களிடமும் இக்குறை இருந்ததை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். - - இராஜராஜனும், இராஜேந்திரனும் தேவாரங்கள் தோன்றிய சோழ நாட்டில் வாழ்ந்தும், கோளகி சைவத்தைச் சேர்ந்த வடவராகிய சதுரானன பண்டிதரைக் குருவாகக் கொண்டிருந்ததை அறிவோம். இதே குறை மகேந்திர வர்மன், நின்றசீர்நெடுமாறன் ஆகியோரிடமும்