பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 169 கூறியிருக்க முடியாது. வந்து சார்ந்தார் என்பதால் இவர்கள் எங்கோ மக்கள் வாழாத பகுதியில் வாழ்ந்தனர் என்பதும், தேவை ஏற்பட்டபொழுதே நேராக அரசனிடம் வந்தனர் என்பதும் அறியப்படும். காஞ்சியில் வாழ்ந்த தமிழ்ச் சமணர்களைப்பற்றி இவ்வாறு கூறமுடியாது. யாரும் மதம் மாறக்கூடாது என்ற ஓர் ஆணையைத் தான் எக்காலத்திலும் பிறப்பிக்கவில்லை என்றும், ஒரு தனி மனிதன் மதம் மாறினால் அதனால் பெருந்தீங்கு விளைந்து விடாது என்றும் அரசன் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மகேந்திரவர்மன் அமைச்சர்களை அழைத்து, மருள்நீக்கியாரை அழைத்துவரச் சொன்னானாம். அவன் என்ன சொன்னான் என்பதைப் பின்வரும் பாடலில் சேக்கிழார் கூறுகிறார், . . . . “அருள்கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி - - - "அறிவுஎன்று மருள்கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை - - - நோக்கித் தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் பொருள் கொண்டுவிடாது, என்பால் கொடுவாரும்' - எனப் புகன்றான். (பெ. பு-360) அமைச்சர்களைப் பார்த்து ஓர் அரசன், கையூட்டு வாங்கிக்கொண்டு அவனை விட்டுவிடாமல் என்பால்