பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 சேக்கிழார் தந்த செல்வம் கொண்டு வாருங்கள்’ என்று பேசுவானேயானால் அவனுடைய ஆட்சி எத்தனை கீழ்த்தரம் ஆனதாக இருந்திருக்கும் என்பதனைத் தெரிவிக்கவே, சேக்கிழார் இவ்விடத்தில், பொருள் கொண்டு விடாது என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். அஞ்சுவது யாதொன்றும் இல்லை "அரசன் ஆணை, நீங்கள் உடன் வரவேண்டும்” என்று ஏவலர்கள் வந்தழைத்தபோது, பெருமான் திருவதிகையில் இருந்தார். அரசன் ஆனை என்ற சொல்லை, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நாமார்க்கும் குடியல்லோம் (6-98-1) என்று கூறுவதால், தாம் யாருக்கும் அடிமையில்லை என்பதை வலியுறுத்துகிறார். அடுத்து, எப்படியாவது அவர் வந்துதீரல் வேண்டும், இன்றேல் அரசன் தங்களைத் தண்டிப்பான் என்று வந்தவர்கள் வேண்ட அவர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால் அவர் களோடு புறப்படுவதற்கு முன், சுண்ண வெண் சந்தனச் சாந்தும் என்று துவங்கும் பாடலின் இறுதி அடியில், - с &š -கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை” - х r - (திருமுறை-4, 2, 1)