பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 171 என்று கூறுகிறார். மன அமைதி எங்கே கிடைக்கும் என்று தேடியலைந்த நாவரசருக்கு மனஅமைதி, மனத் திடம், நெஞ்சுறுதி என்பவை கிடைத்துவிட்டன." அதன் விளைவாகவே நான். யாருக்கும் அடிமையில்லை’ என்றும் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை என்றும் பேச முடிகிறது. இராவணன், இரணியன்முதல், இன்றுள்ளவர் களில்கூடப் பலர், தாம் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. தம்மை அசைக்க யாராலும் முடியாது என்று பேசியுள்ளார். இங்ங்னம் பேசிய இரணியன் முதலானோர் என்ன கதி அடைந்தனர் என்பதை நாம் அறிவோம். நாவரசரும் இதைத்தானே சொன்னார் ? அப்படியிருக்க, இவர்களிடையே வேற்றுமை என்ன என்று கேட்கப்படலாம். இரு கூட்டத்தாரும் சொல்லிய சொற்களில் வேற்றும்ை இல்லை. ஆனால் அச்சொல்லின்பின்னே நின்ற அவர்கள் மனநிலையில்தான் மன்லபோன்ற வேறுபாடு உள்ளது. இரணியன் முதலானோர் தான்' என்ற ஆணவத்தின் அடிப்படையில் நின்று இவ்வ்ாறு கூறினர். நாவரசர் கூற்றின்பின்னே உள்ள மனநில்ை வேறு. சங்கரன் என்ற கோமானுக்கு மீளா ஆட்பட்டு விட்டமையின் வேறு யாரையும் தலைவர் என்று. ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார். பெரும்ான். அடுத்து, ஒரு மனிதன் அஞ்சாமல் இருப்பதென்பது. இயலாத காரியம். ஏதோ ஒன்றில்லாவிட்டால், மற்றொன்றிற்கு அஞ்ச நேரிடும். ஆனால், பெருமான்