பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சேக்கிழார் தந்த செல்வம் இங்கே, அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை என்று கூறுகிறாரே, இது சரியா? என்று சிந்தித்தால அதற்குரிய விடையை அதே அடியின் முற்பகுதியில் அவர் விளக்கமாகக் கூறுகிறார். கெடிலப்புனல் உடையார் ஒருவர் தமர் நாம் என்று கூறுவதால் வீரட்டானேசுவரர்க்குப் பக்தராகிய நாம் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை என்று விளக்கம் தருகிறார். - நியாயத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் இருப்பது பெரு வீரம் எனப்பெறும். இந்த வீரம் ஒருவருடைய மனத்தில் விளையவேண்டுமாயின் அதற்குரிய பக்குவம் யாதென்று சிந்திப்பது நலம். பகைவர்களை வெல்லுவதுமட்டும் வீரமன்று. பொறிபுலன்களை அடக்கி வாழ்வதே மாபெரும் வீரமாகும். இதனாலேயே வெளிப்பகையை, புறப்பகை என்றும், பொறிபுலன்களை அகப்பகை என்றும் நம் முன்னோர் வகுத்தனர். அகப்பகையை வெல்ல எந்தத் தனி மனிதனும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. 'அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்; அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை' (திருமந்:2033) என்ற திருமூலரின் வாக்கு, சிந்தனைக்குரியது. பொறி புலன்களை வெல்லவேண்டுமானால் அதற்கொரு. துணை தேவை. புறப்பகையை வெல்லத் துணை நாடுவது போல அகப்பகையை வெல்லவும் می ஒரு துணை தேவைப்படுகிறது. அந்தத் துணை இறையன்பு