பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 173 என்பதாகும். பற்றற்றான் பற்றினைப் பற்றுவது ஒன்று தான் பற்றை விடுவதற்கு வழியாகும் என்கிறார் திருவள்ளுவர். நாவரசர் பெருமானுக்குப் பொறி புலன்களை வெல்ல உதவியாக இருப்பது கெடிலப் புனலுடையான் திருவடிப் பற்றே ஆகும். அகப்பகை ஆகிய இந்தப் பற்றை வென்றவர்க்கு அச்சம் என்பது கனவிலும் வாராது. அந்த அடிப்படையில்தான் கெடிலப் புனலுடையான் அடியவர்களாகிய நமக்கு அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்சவருவதுமில்லை என்று துணிவோடு கூறுகிறார். அகப்பகை வென்றவர்க்குப் புறப்பகை இல்லை. களப்பிரர் தூண்டுதலால் காளவாயில் இடுதல், நஞ்சினை ஊட்டல் முதலிய கொடுமைகளை எவ்விதக் காரணமும் இல்லாமல் அரசன் செய்தபொழுது, நாவரசருக்குச் சினமோ காழ்ப்புணர்ச்சியோ அவர்கள் மாட்டு வெறுப்போவாராமைக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும். அகப்பகையை வென்றவர்க்கு, புறப்பகை என்று எதுவுமில்லை. பகை என்று ஒருவரைக் கருதினால் தான் காழ்ப் புணர்ச்சியும் சினமும் ஏற்பட இடமுண்டு. களப்பிரரையும் அவர்களைச் சார்ந்த மன்னனையும் பகைவர் என்று நாவரசர் நினைக்கவே இல்லை. அதனால் அவர்கள்மாட்டு சினமோ காழ்ப் புணர்ச்சியோ தோன்றவேயில்லை. அஹிம்சைத்