பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சேக்கிழார் தந்த செல்வம் தத்துவத்தின் அடிப்படை இதுதான். எச்சமயத்தைச் சேர்ந்தவராயினும் அகப்பற்றை வென்றவர்க்குப் பகைவர் என்று யாருமில்லை. நேரடியாகக் கொடுமை இழைத்தவர்களைக்கூட அவர்கள் பகைவர்கள் என்று கருதுவதில்லை. முதல் நூற்றாண்டில் ஏசு பெருமானும் ஆறாம் நூற்றாண்டில் நாவரசப் பெருமானும் இருபதாம் நூற்றாண்டில் மகாத்மா காந்தியும் இதற்கு இலக்கியம் ஆவர். - இந்த நிலையும் பழைய புறநானூற்றில் பேசப் படுவதைக் காணலாம். இன்று பலராலும் பேசப்படும் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பாடல் இதற்குரிய விளக்கத்தைத் தருகிறது. ஒருவரை எப்பொழுது நாம் பகைவர் என்று நினைக்கின்றோம்? நம்முடைய உடல், பொருள், ஆவி என்ற மூன்றில் ஏதாவது ஒன்றிற்கோ அல்லது மூன்றுக்குமோ ஊறு விளைவிப்பவர்களைப் L6)& என்று நாம் கருதுகிறோம். இந்த நினைவு போவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. எத்துணைத் தீமையை ஒருவர் செய்யிலும் அவர் செய்த காரணத்தால் அத்தீமை நம்பால் வரும் என்று கருதுவது தவறு. நமக்கு ஏற்படும் நன்மை, தீமை ஆகிய இரண்டும் நம்முடைய செயல்களின் பின்விளைவே தவிர எவர். ஒருவரும் நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாது. நம்முடைய உடம்பு நோகும்படியாக ஒருவர் கொடுமை இழைக்கும்பொழுதுகூட, அவர் இதனைச்