பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 175 செய்தார் என்று நினைப்பது தவறானது என்ற கருத்தை மேலே காட்டிய புறப்பாடலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அடிகள் விளக்குவதைக் காணலாம். தீதும் நன்றும் பிறர் தர வரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே. (புறம் 192) என்ற அடிகளின் மூலம் கணியன் பூங்குன்றன் என்ற கவிஞன் அஹிம்சைத் தத்துவத்தின் அடிப்படையை நன்கு விளக்குகிறான். இந்த அடிப்படையில் வாழ்பவர்கட்குப் பகை என்று யாரும் இருக்க முடியாது. அதனால்தான் இவர்கட்குத் தீமை செய்தவர்களைகட்டப் பகைவர்கள் என்று இவர்கள் கருதுவதில்ல. தீங்கிழைத்தவர்களையே தம்முடைய சுற்றத்தார் அல்லது உறவினர் என்று இவர்கள் நினைக்கிறார்கள். வஞ்சகமாகத் தம்மைக் குத்திக் கொன்ற முத்தநாதனை மெய்ப்பொருள் நாயனார் யார் என்று நினைக்கிறார்? அவனைக் கொல்ல வந்த பணியாளனாகிய தத்தனைப் பார்த்து, “தத்தா! நமர் என்று கூறித் தடுத்தாரென்றால், கிறித்துவ சமயத்திற்கு ஒரு ஏக தோன்றியதைப் போலச் சைவ சமயத்திற்கு ஒரு நாவரசரும், ஒரு மெய்ப்பொருள் நாயனாரும் உள்ளனர் என்பதை நினைக்கும்பொழுது மகாத்மாவின் அஹிம்சைத் தத்துவம், இத்தமிழ் நாட்டில் கிறிஸ்துவிற்கு முன்னர்ச் சங்க காலத்தில் தோன்றி மெய்ப்பொருள், நாவரசர் காலம்வரை விரிந்து வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. -