பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சேக்கிழார் தந்த செல்வம். இறையன்போடு இசைந்த அஹிம்சை அஹிம்சைத் தத்துவத்தை வெறும் வாய்ப் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்த மகாத்மா இதைக் கொண்டு செலுத்த இரண்டு முக்கியமான தேவை களைப்பற்றிக் கூறுகிறார். அவற்றுள் முதலாவது இறையன்பு என்பதாகும். துன்பத்தை மன அமைதியோடு ஏற்றுக் கொள்ளும் இயல்பு இறை அடியார்க்குமட்டுமே முடியக்கூடிய ஒன்றாகும். நாவரசரின் இறையன்புபற்றி ஒன்றும் கறத் தேவையில்லை. காந்தி அடிகள் கூறும் இரண்டாவது தேவை மனஉறுதியும், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளும் ஆகும். வாய்மை, அஹிம்சை என்ற இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டமையின் தம் வாழ்நாள் முழுதும் இவ் இரண்டையும் கொண்டு செலுத்த அடிகளுக்கு முடிந்தது. அதே போன்று இறையன்பு இல்லாமல் மன அமைதியைத் தேடப் போகின்ற நாவரசருக்குத் தாம் பிறந்த சமயத்திலும் புகுந்த பிற சமயத்திலும் அது கிட்டவில்லை. அதனாலேயே இறையன்பைச் சேர்த்துக்கொண்டா லொழிப் அமைதி கிட்டாது என்பதைப் புரிந்து கொண்டார் நாவரசர் அந்த வினாடியிலிருந்து இறையன்போடு கூடிய அஹிம்சை அவர் குறிக்கோளாக அமைந்துவிட்டது. -