பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 177 மக்கள் தொண்டே மகேசன் தொண்டு வாய்மை, அஹிம்சை என்ற இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற முடிவுக்குத்தான் வருகிறார்கள். நாவரசரைப் பொறுத்தமட்டில் உழவாரப் பணிமூலம் பிற்காலத்தில் தொண்டு செய்தார். வாழ்க்கையின் தொடக்கத்தில் குளம் வெட்டல், கா வளர்த்தல் என்பன போன்ற மக்கட் பணியில் ஈடுபட்ட பெருமான், பிற்காலத்தில் உழவாரப் பணியை மேற்கொண்டதன் நோக்கம் எதுவாக இருக்கும் என்ற வினாவை எழுப்பினால், ஓர் அற்புதமான விடையைக் கண்டுபிடிக்க முடியும். பெருஞ்செல்வத்துடன் வாழ்ந்த அந்த இளமைக் காலத்தில் ஏவுதற் கர்த்தாவாகமட்டும் நின்று பணியாளர்மூலம் கா வளர்த்தல் முதலியனவற்றைச் செய்தார். அதன் முடிவில் "நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து விட்டார்” (பெபு-1807) எனவே, புறச்சமயம் சென்று மீண்ட பொழுது உள்ளம், உடல் என்ற இரண்டிலும் முழுத் துறவு பெற்றவராகவே இருந்தார். இடையில் ஒன்றும் நிகழாமையின் குடும்பச் செல்வம் அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும், பெருமான் ஏனோ அவற்றைத் திரும்பிப் பார்க்கவோ எடுத்துப் பயன்படுத்தவோ மறுத்துவிட்டார். "கந்தை