பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சேக்கிழார் தந்த செல்வம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும்”(பெ.பு2173) என்று சேக்கிழார் பாடுவதால் பெருமான் முழுத் துறவை மேற்கொண்டார் என அறிய முடிகிறது. இற்றை நாளில் ஒரு தவறான கருத்து, சமுதாயம் முழுதும் பரவியுள்ளது. ஒருவர் துறவியாகிவிட்டால் எந்தப் பணியும் எந்தத் தொண்டும் செய்யவேண்டுவ தில்லை. மக்கள் அனைவரும் அந்தத் துறவிக்குத் தான் தொண்டு செய்யவேண்டுமே தவிர அவர் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்ற இந்தத் தவறான கருத்து இன்று இந்தியாமுழுவதும் பரவி யிருப்பதுடன் தமிழகத்தில் சிறப்பாகப் பரவியுள்ளது. இக்கருத்து, தவறானது என்பதை அறிவுறுத்தவே நாவரசர்பெருமான் மனம், மொழி, மெய்களால் இறைத் தொண்டு புரிவதுடன் மக்கள் தொண்டையும் உழவாரப் பணி செய்வதுடன் மேற்கொண்டார் என்பதை இற்றைநாள் துறவிகள் அவசியம் அறிய வேண்டும். இந்த உழவாரத் தொண்டைப் பெருமான் எங்கெங்கே செய்தார் என்பதை மிக நுணுக்கமாகச் சேக்கிழார் காட்டுகிறார். முக்கியமாகச் சிதம்பரம், திருவாரூர் ஆகிய இரண்டு இடங்களிலும் தெருக்களிலும் உழவாரப் பணி செய்தார் என்று கவிஞர் குறிப்பிட்டுக் காட்டுவதில் ஓர் உண்மை பொதிந்துள்ளது. இவை இரண்டும் மிகப் பிரசித்தி பெற்ற தலங்கள் ஆதலால், மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பது அறியப்பட வேண்டிய ஒன்று.