பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 179 மக்கள் கூட்டம் அதிகமானால் குப்பை, கூளம், தூய்மையின்மை என்பவை அவ்வூர்த் தெருக்களில் மிகுந்து காணப்படுவது இயல்பு. எனவேதான், பெருமான் இவ்வூர்த் தெருக்களில் உழவாரப் பணி செய்தார் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் சேக்கிழார். திருக்கோயில் பிராகாரங்களிலும் தெருக் களிலும் உழவாரப் பணி செய்வது மக்கள் நடமாடும் பகுதிகள் துப்புரவாக இருக்கவேண்டும் என்ற கருத்தில்தான் பெருமான் இப்பொறுப்பை மேற் கொண்டார். நாவரசர்பெருமானின் வாழ்க்கை இத் தமிழ்ச்சமுதாயத்தில் வாழும் நாம்-இல்லறத் தாராயினும், துறவறத்தாராயினும்-அறிந்து கடைப் பிடிக்க வேண்டிய பலவற்றைத் தன்பால் கொண்டுள்ளதாகும். ஒரே ஒரு கருத்தைமட்டும் இங்கு நினைவிற் கொள்ளுதல் நலம். வாழ்நாள் முழுவதும் முழுத் தொண்டு செய்த பெருமான், இக்காலத் துறவிகளைப் போல மக்களைப் பார்த்து, நீங்கள் அது செய்யவேண்டும், இது செய்யவேண்டும் என்று உபதேசம் செய்யவில்லை. அந் நாளைய துறவியாகிய அவர் உபதேசம் செய்யவில்லை; தாமே தொண்டு செய்தார். இக்காலத் துறவிகள் வாய் உபதேசம் செய்கிறார்கள், எந்த ஒரு தொண்டையும் செய்வதில்லை. பின்னர் வரும் சமுதாயத்திற்கு வழி காட்டவேண்டி அடியார்கள் வரலாறுகளைக் கூறவந்த சேக்கிழார், அவ்வரலாறு களின் மூலமாகவே தாம் சொல்லவந்தவற்றை இலைமறைகாயாகச் சொல்லி யுள்ளது ஆழ்ந்து சிந்தித்து வாழ்வுடன் இணைத்துக்