பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 181 கிடப்பவன் ஒரு மனிதன் என்று கூறுவது பொதுநிலையில் பொருந்தாது. கிடப்பது என்ற அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதன்மூலம் நாவரசர் பெருமான் மனித சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் தத்துவத்தையே விளக்குகிறார். பணி செய்த ஒருவன் அதற்குரிய பயனை எதிர் பார்ப்பதுதான் இயற்கை அதில் தவறு ஒன்றும் இல்லை. மனிதனுக்குப் பணி செய்கின்ற மாடு முதலிய விலங்குகள்கூடப் பணி முடிந்தபின் உணவு ஆகிய பயனை எதிர்பார்க்கின்றன. எனவே, பணி செய்த ஒருவன் பயனை எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லை. அவ்வாறு இருக்க, பெருமான் 'கிடப்பதே என்று கூறியதன் நோக்கம் யாது? பணி செய்து நிற்பதே அல்லது இருப்பதே அல்லது 'வாழ்வதே’ என்று கூறியிருக்கலாம். பாடுபவரோ, செந்தமிழ், வடசொல், பாலி ஆகிய மொழிகளைக் கற்று கரைகண்ட பேரறிஞர். அப்படியிருக்க, இருப்பதே, நிற்பதே, வாழ்வதே என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் கிடப்பதே என்று பாடினார் என்றால், ஒரு சிறந்த கருத்தைத் தெரிவிக்கவே இச் சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிய வேண்டும். - ஸ்வேதாஸ்வரம் .” கர்மயோகம் TED! கீதை கூறுவது இதையே ஆகும். "கர்மண்யேவா அதிகாரஸ்தே, மாப' - என்பது