பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சேக்கிழார் தந்த செல்வம் கர்மயோகத்தின் சாரம் ‘கடமையைச் செய்வதுதான் உனது உரிமையே தவிர அதன் பயனை எதிர் பார்ப்பது அன்று என்ற கீதையின் தாக்கம் பெருமானுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால், ‘என்னுடைய கடமை, நீ இட்ட பணியைச் செய்துவிட்டுப் பயனை எதிர்பாராமல் ஒரு கல் போன்று கிடப்பதே ஆகும் என்ற பொருளில்தான் "கிடப்பதே என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு கூறுவது, சைவப் பெருமக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். ஆனால், சேக்கிழார் பெருமான், பொருளை நிரம்பச் செலவிட்டுப் பல கலைகளையும் மருள்நீக்கியார் பெற்றார் என்று கூறுவதால் இவ்வாறு நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அன்றியும் விறகில் தீயினன்' (திருமுறை: 5-90-10) என்ற தனித்திருக் குறுந்தொகைப் பாடல் ஸ்வேதாஸ்வர உபநிடத்தின் பாடலை அப்படியே மொழிபெயர்த்துக் கூறியதாகும் . என்பதையும் அறிதல் வேண்டும். மிகவும் பிரசித்தி பெற்ற உப நிடதங்களையெல்லாம் விட்டுவிட்டு ஸ்வேதாஸ்வர் உபநிடத்தில்மட்டும் ஏன் நாவரசர் பெருமான் ஈடுபட்டிருக்கிறார் என்பதைப்பற்றிச் சிந்தித்த பொழுது ஒர் உண்மை வெளிப்பட்டது. ஏனைய உபநிடதங்கள் பரம்பொருளைப் பிரம்மம் என்று கூறுமே தவிரச் சிவன் என்று கூறியதில்லை. ஆனால், இவற்றிலிருந்து மாறுபட்டு ஸ்வேதாஸ்வதர முனிவர் சிவனையே பரம்பொருள் என்றும் அவனைச் சரணடைந்து பக்தி செய்வது எவ்வாறு என்றும்