பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 183 கூறியுள்ளார். அதனால்தான் பெருமான் அந்த ஒரு உபநிடதத்தில் மட்டும் ஈடுபாடு கொண்டு பேசி புள்ளார் என்பதை அறியமுடிகிறது. பிற மொழி நூல்கள், பிற சமயநூல்கள் என்பவற்றையெல்லாம் கற்றுத் துறைபோகிய பெருமான், அந்நூல்களிலும் அச்சமயங்களிலும் காணப்பட்ட சிறந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை அறிதல் வேண்டும். களப்பிரர்கள் (அமண்கையர்) இயக்கிய சமண சமயத்தில் அடிகள் புகுந்தாரேனும், பல்லாண்டுகள் அச்சமயத்தின் ஈடுபட்டிருந்தமையின் அந்நூல் களையும் கற்றறிந்திருந்தார். அமண்கையர் என்ற சொல் தமிழ்நாட்டுச் சமணர்களைக் குறிக்கின்ற சொல் அன்று வந்தேறிகளானவர்களும் சமண சமயப் போர்வையில் வாழ்ந்தவர்களும் அரசியல் செல்வாக்குடன் இருந்தவர்களும் ஆகிய களப்பிரர், மேலாதிக்கம் செலுத்தினரே அன்றி இங்குள்ள சமணர்களிடம்கூட அவர்கள் ஈடுபாடு கொண்ட தாகத் தெரியவில்லை. தமிழை அறியாதவர்களாகிய களப்பிரர், தமிழில் உள்ள சமன நூல்களை அறிந்திருக்க நியாயமில்லை. அச்சமயத்தில் வாழ்ந்த பொழுது நாவரசர் கண்ட ஒரு சமணர்கள் கூறும் மந்திரம் அவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். "தயாமூல தன்மன்’ என்ற சமணருடைய மந்திரத்தை சிவபெருமானுக்கே ஏற்றிப் பாடும் அரிய மனத்திடம் உடையவர் பெருமான் என்பதை தயாமூல தன்மன் கண்டாய் என்ற அவருடைய பாடல் வரிகள்.