பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சேக்கிழார் தந்த செல்வம் அஹிம்சைக் கொள்கையில் இவ்வளவு அழுத்தமான நம்பிக்கையை பெருமான் பெறுவதற்கு அவர் சமண சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்ததும் ஒரு காரண மாக இருக்கலாம் என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. முதல் சத்தியாக்கிரகி இதனை அடுத்து நாவரசப் பெருமானை முதல் சத்தியாக்கிரகி என்று கூறுவது பொருத்தமுடைய தாகும். ஒரு மனிதன் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்து அதன்படி நடக்கத் தொடங்கினால் மனிதன், மாமனிதனாக அல்லது பெருந்தொண்டகை ஆவதற்கு அதுவே முதற் படியாகும். துணிந்து செயற் படத் தொடங்கிய பிறகு அந்தச் செயல்பாட்டிற்கு எத்தனை தடை வந்தாலும் அதைக் கொண்டு செலுத்துவதில் உயிரே போவதானாலும் கவலைப்படாமல் செயல் படுபவனே சத்தியாக்கிரகி என்று கூறப்பெறுகிறான். சத்தியத்தை ஆக்கிரகித்தல் அதாவது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் என்ற பொருளுடைய சொல்லுக்குப் புதிய விளக்கம் தந்தார் நம் காலத்து வாழ்ந்த மகாத்மா இறை நம்பிக்கையின் அடிப்படையில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தாம் மேற்கொண்ட செயற்பாட்டில் முன்ன்ேறுவதே சத்தியாக்கிரகம் என்றார் மகாத்மா நாவரசர் பெருமானின் வாழ்க்கையில் அவர் சத்தியாக்கிரகம் செய்த இரண்டு நிகழ்ச்சிகள் நம் சிந்தனைக்குரியன்.