பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 185 ஊர்கள்தோறும் சென்று இறைவழிபாட்டுடன் மக்களைச் சந்திக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த நாவரசர்பெருமான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழையாறை என்ற ஊருக்கு வருகிறார். அங்குள்ள சிவன் கோயில் மணல்மேடிட்டு விமானம்மட்டும் வெளியே தெரிகின்ற நிலையில் இருந்தது. உடனிருந்த வர்கள் இது சமணப்பள்ளி’ என்று கூறினர். ஆனால், விமானத்தின் அமைப்பைக் கண்ட நாவரசர் அது சிவன் கோயில், மண்ணை இட்டுப் புறச்சமயத்தார் மூடிவிட்டிருந்தனர் என்பதை உணர்கின்றார். உடன் இருந்தவர்கள் துணைகொண்டு மணல்மேட்டைப் பறித்து கோயிலை வெளிக்-கொணரவே அப் பகுதியை ஆண்ட சிற்றரசனிடம் சென்று முறையிட்டு இக் காரியத்தைச் சாதிக்கவே-இப்பெருமான் விரும்ப வில்லை. அதற்குப் பதிலாக உண்மையான சத்தியாக் கிரகியாகிய அவர் அருகே இருந்த மண்டபத்தில் சென்று அமர்ந்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். இதனைக் கூறவந்த சேக்கிழார், "வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகன்' என்று எண்ணம் முழக்கும் வாகீசர் . இருந்தார் - அமுது செய்யாதே; அணணலாரும அது உணாநது அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத் திண்ணமாக மன்னனுக்குக் . கனவில் அருளிச் செய்கின்றார். . (பெ. பு-1566) என்று பாடுகிறார்.