பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சேக்கிழார் தந்த செல்வம் தனிமனிதராகிய நாவரசர் மேற்கொண்ட இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம், அப்பகுதிச் சிற்றரசன் ஆட்களுடன் வந்து பழையாறை வடதளிப் பெருமானை வெளியே கொணருமாறு செய்தது சத்தியாக்கிரகம் என்ற சொல்லை நமக்குத் தந்த மகாத்மா, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தேவையான ஆயுதங்கள் யாவை என்று சொல்லும்பொழுதுவாய்மை, அஹிம்சை, நெஞ்சுரம், இறைபக்தி என்ப வற்றோடு உண்ணாவிரதத்தையும் ஒர் ஆயுதமாகக் கூறுவதைக் காணலாம். ஆயிரம் கோயில்களில் சிவபெருமானை வழிபட்டாலும், பழையாறையில் ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்த நாவரசர் அத்தவற்றை நீக்கச் சத்தியாக்கிரகப் போர் தொடுப் பதையும், உண்ணா நோன்பு இருத்தலையும் மேற் கொள்ளுதலைக் காணலாம். சைவ சமயத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை மனிதன் மேற்கொள்ள வேண்டியவற்றில் உண்ணா நோன்பும் உண்டு என்று எங்கும் குறிக்கப் படவில்லை. அப்படி இருந்தும் முதன் முதலாக உண்ணா நோன்பை மேற்கொண்டார் நாவரசர் என்றால், அது வியப்பாக உள்ளது. உண்ணா நோன்பை வலியுறுத்தும் சமயம் சமணசமயமே ஆகும். அச்சமயத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்த நாவரசர் உண்ணா நோன்பின் (உபவாசம்) வலிமையை அறிந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. உண்ணா நோன்பிருந்து, சத்யாக்கிரகம் செய்து பழையாறை வடதளிப் பெருமானை வெளிக்கொணர்ந்தார்