பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 187 நாவரசர் என்பதால், உலகின் முதல் சத்தியாக்கிரகி இவரே என்று கொள்வதில் தவறில்லை. அடுத்தபடியாக, நாவரசர் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் மிகக் கடுமையானதாகும். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தைத் தனி ஒருவராக எதிர்த்து நின்று அரையாடை உடுத்த ஒரு மா மனிதர் கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போரைத் தொடங்கியபொழுது பலரும் அவரைப் பயித்தியக்காரர் என்றுதான் கூறினர். எந்த ஒரு தனிமனிதனும் கற்பனைக்கூடச் செய்துபார்க்க முடியாத ஒரு போரை, ஒரு தனி மனிதன் தொடங்கினால் சராசரி மக்கள் அதனை எள்ளி நகையாடுதல் இயல்புதான். இதே போன்று மனித உடம்புடன் உள்ள்வர்கள் யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத ஒர் அருஞ்செயலை நாவரசர் மேற்கொண்டார். அவருடைய தலயாத்திரையில் திருக்காளத்தி வந்து பெருமானையும், குலவேடர் பெருமானையும் ஒருங்கே கண்டு வழிபட்டார். தென்திசையில் கயிலையாம் காளத்தி மலையில் கருணையே வடிவாக உள்ள சிவபெருமானையும், அன்பே வடிவாக நின்றிருக்கும் கண்ணப்பரையும் வணங்கியவுடன் வடகயிலையில் பெருமான் எழுந்த கோலத்தைக் காண வேண்டும் என்ற அவா நாவரசர் உள்ளத்தில் தோன்றிற்று. (பெபு-1617) இவ் உடல் கொண்டு கயிலை செல்ல இயலாது என்பதை அறியாதவரல்லர் நாவரசர்.