பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சேக்கிழார் தந்த செல்வம் மாபெரும் கல்விமானாகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவராகவும் உள்ள அவருக்கு இந்தச் சாதாரண உண்மை தெரியாமல் இருக்க முடியாது. தெரிந்திருந்தும் துணிந்தார் என்றால், அது எண்ணித் துணிந்த கருமம் ஆகும். சென்ற முறையையும் பனிக் கட்டியின்மேல் நடந்ததால் உண்டான கொடுமை களையும் சேக்கிழார் வருணிக்கின்றார். அந்த நிலையிலும் கை, கால்கள் உதவாமல் போக, உடலோடு உருண்டு செல்லும் துணிச்சலான செயலையும் மேற்கொண்டார். பனிக் கட்டியின் மேல் உடல் படுவதால ஏற்படும் (பெபு-1630) நோயால் இரத்த ஓட்டம் தடைப்பட, மேலே செல்ல முடியாத நிலையில் நின்ற பொழுது, எதிரே ஒரு முனிவர் தோன்றி, ஏன் வந்தாய்?’ என்று கேட்டார். 'இறைவன் கயிலையில் இருந்த கோலத்தைக் காணவே வந்தேன்’ என்று ஆளுடைய அரசு கூற, முனிவர், 'அமரரும் அணுக முடியாத இடத்தை இவ்வுடல் கொண்டு அடைய முற்பட்டது பெருந்தவறாகும். உடன் மீண்டு செல்க' என்று முனிவர் கூறவும், பெருமான் பின்வருமாறு பேசலானார், "மீளும் அத்தனை உமக்குஇனிக் கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனிசொல்ல, - ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல் லால் மாளும் இவ்உடல் கொண்டு மீளேன்' என மறுத்தார். - (பெ. பு-1636)