பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சேக்கிழார் தந்த செல்வம் எல்லையை விரிவாக்க வேண்டும். இது தவிர வேறு வழியில்லை. அப்படியானால், அந்தப் போரை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்பதை இராம காதையின் மூலம் வெளியிடுவதே கம்பனின் நோக்கம். சங்கப் பாடலில், நான்கு வகைப் படைகள் ஒருவனிடம் மிகுதியாக இருந்தாலும் அவன் வெற்றி பெறுவது அறநெறியாலேயே ஆகும் என்ற மிக முக்கியமான ஒரு கருத்தைக் கூறும், நான்குடன் மாண்டதாயினும், மாண்ட அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்: (புறம்:55:10-11) என்ற புறப்பாடலே, போருக்கு 5000 பாடல்களைப் பாடக் கம்பனைத் தூண்டிற்று. இதனை அடுத்து வந்த வள்ளுவர், ‘. . . வேல் அன்று வென்றி தருவது, மன்னவன் கோல், அது உம் கோடாது. எனின் (குறள்-546) என்று கூறி, இப்பழைய கருத்தை வலியுறுத்திப் போனார். விரிந்து பரவ வேண்டும் என்று கனவு கண்ட சோழருக்குக் கம்பன் தன் கதையின் மூலம் இதனை விளக்குகிறான். எண்ணற்ற படைபலம், ஆயுதபலம், தெய்வப்படைகள் பலம், வர பலம் ஆகிய அனைத்தையும். கொண்ட இராவணன்,