பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 189 மனிதர்கள் வகுத்த சட்டத்தை மீறிச் சத்தியாக்கிரகப் போர் புரிந்தார் மகாத்மா. இறைவன் இயற்கையின் வழியாக அமைத்த சட்டத்தையே மீறி நாவரசர் சத்தியாக்கிரகம் செய்தார். சத்தியாக்கிரகத்தின் வலிமை எத்தகையது என்பதை ஆறாம் நூற்றாண்டில் ஒருவரும், இருபதாம் நூற்றாண்டில் ஒருவரும் உலகறியக் காட்டினர். மகாத்மாவின் சத்தியாக் கிரகத்தின் எதிரே ஆங்கிலப் பேரரசு வளைந்தது. ஆறாம் நூற்றாண்டு சத்தியாக்கிரகியான நாவரசரின் முன்னே இறைவனும் தான் வகுத்த சட்டத்தை வளையச் செய்தான். நாவரசரை அண்மையில் உள்ள குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் வெளிப்படுமாறு செய்தான் இறைவன். பெளதிக உலகில் ஒருவனோ, ஒருத்தியோ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமேயானால் நடந்தோ, அன்றி ஒரு வாகனத்தின்மீதோதான் செல்ல வேண்டும் நடந்து சென்றால் கால் சுவடு பூமியில் பட்டே தீரும். வாகனத்தில் சென்றால் வாகனத்தின் சக்கரங்களின் சுவடு பூமியில் பட்டே தீரும். இவ்வாறு, யாதும் சுவடு படாமல் கயிலைக் குளத்தில் மூழ்கி, திருவையாற்றில் ஆளுடைய அரசு தாம் வந்ததை தேவாரத்தில், மாதர் பிறைக் கண்ணியானை என்று துவங்கும் பாடலில், 'யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது என்று பெருமானே பாடியுள்ளார். இவ்வாறு சுவடுபடாமல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல