பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சேக்கிழார் தந்த செல்வம் இறைவன் ஒருவனால்தான் முடியும். இவ்வருஞ் செயலைக் கம்பநாடன், "வாராதே வரவல்லாய்' என்று கூறுவதிலிருந்து அறியலாம். வாராதே வரவல்ல இவ்வருஞ் செயலை ஆறாம் நூற்றாண்டில் பெருமான் நிகழ்த்தினார் என்றால் உலகின் முதல் சத்தியாக்கிரகியின் வெற்றியாகும் இது. ஐயத்திற்கு இடமான பாடலும் விளக்கமும் இறையருளால் வாகீசப் பெருமானுக்குச் சூலைநோய் வந்ததும் அதனைப் போக்க வழியின்றித் தமக்கை யாருக்குச் சொல்லியனுப்பியதும் அப்பெரு மாட்டியார் வந்தப் பணியாளனைப் பார்த்தவுடன்’ தீங்கு உளவோ? எனக் கேட்டதும் அமண் பாழிக்குத் தாம் வர முடியாது என்று கூறியதும் சேக்கிழார் கூறிய செய்திகள். இதைவிட வியப்பு என்னவெனில் தாம் வரஇயலாது என்று கூறினாரே தவிர, தம்பியை இங்கு வரச்சொல்’ என்று கூறவேயில்லை. செய்தி அறிந்த வாகீசர், சோதரியை நாடி வந்ததும் அம்மையார் திருநீற்றை அளித்து, திருக்கோயில் செல்லுமாறு பணித்ததும் வரலாறு கூறும் செய்திகள் ஆகும். புறச்சமயத்திலிருந்து வந்தவரை ஏசாமல் பிற்காலத்தார் கூறும் பிராயச்சித்தம் முதலிய எதுவும் செய்யாமல் சோதரியார் ஏற்றுக்கொண்டார் என்றால் இந்த இரு சமயத்தாரிடையேயும் இருந்த நிலை சிந்திக்கத் தக்கதாகும்.