பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 191 சகோதரியார் ஆணையின்படி பெருமான் அதிகை வீரட்டானத்திலுள்ள சிவபெருமானை வணங்கச் சென்றார். அங்கே சென்று அவர் பாடிய பதிகம் 'கூற்றாயினவாறு’ என்று தொடங்குவதாகும். இப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்” என்று கூறுவதோடு, ஆறாவது பாடலில், சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் (திருமுறை4-1-6) என்று கூறுகிறார். இந்த இரு பாடல்களும், பாடலிபுரத்திலிருந்து (திருப்பாதிரிபுலியூர்) விடியற்காலம் புறப்பட்டு, சகோதரியாரைச் சந்தித்துக் கோவிலுக்கு வந்த வுடனேயே பாடிய பாடல்களாகும். ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்ச் சமண் சமயம் புகுந்த வாகீசர் இரண்டு மணிநேரத்திற்குமுன்வரை நல்ல சமணராகவே இருந்துவந்தார். அப்படி இருக்க, தம் பழைய வாழ்வை நினைந்து பாடும் இப்பகுதியில் 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்றும் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் என்றும் பாடினார்.