பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 * சேக்கிழார் தந்த செல்வம் அதைக் கற்கின்ற நம் மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்குவதில் வியப்பொன்றுமில்லை. இரண்டு மணிநேரம் முன்புவரை சமணராக இருந்த இவர் சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று பாடினால் அதை என்னென்று சொல்வது! இந்தக் குழப்பத்திற்கு விடை காண்பது மிக இன்றி யமையாததாகும். இரண்டு மாறுபட்ட நிலைகளில் இதுபற்றி முடிபு கூறியவர்கள் உண்டு. பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் எழுதிய அமரர் G.V.பிள்ளை அவர்கள் நாவரசர் பெருமான், சைவர்கள் அனுப்பிய ஒற்றர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சமணர்களின் குறை பாடுகளை அறிந்துகொள்வதற்காக அவர்களுடைய பாசறையில் அவர்களோடு வாழ்ந்து, அவர்களின் குற்றங் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே அனுப்பப்பட்டவர் என்ற கருத்தில் திரு. G.V.பிள்ளை பேசுகிறார். இந்த முடிபு பெரியபுராணத்தையும் நாவுக்கரசரையும் சிறிதும் விளங்கிக் கொள்ளா தவர்கள் தந்த முடிபாகும். அறுவகைக் குற்றங் களையும் செற்று, பகைவர், நண்பர் என்ற வேறுபாடு அற்று வாழ்ந்த ஒரு மாபெரும் ஞானியை ஒற்றர் என்று கூறுவது நகைப்பை விளைவிப்பதாகும். இதிலிருந்து மாறுபட்டுப் பேசும் ©óᏜFᎧl பெருமக்கள் இந்தக் கோடியில் இருந்து எதிர்கோடிக்கே சென்று விட்டனர். அவர்கள் கூற்றுப்படி சமணசமயத்தில் இருக்கும்பொழுதே சைவ