பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 193 சமயக் கொள்கைகளை விட்டுவிடாமல் மறைவாக, பிறர் அறியாமல் ஜெபம், பூசனை முதலியவற்றை செய்தார் என்று முடிவுக்கு வந்துள்ளனர். முதலவர் கூற்றை விட இது கொடுமையானது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கீழ்த் தரமான மனிதராக நாவரசரை இவர்கள் தங்கள் சைவப்பற்று காரணமாக தரந்தாழ்த்திவிட்டனர். இவ்விருசாரார் கூற்றும் நகைப்புடன் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியதாகும். வரலாற்று அடிப்டையில் கண்டால் இவ்விரு பாடல்களும் பெருங் குழப்பத்தைக் கற்பவர் மனத்தில் தோற்றுவிக்கும் என்பதில் ஐயமே இல்லை. இதன் உண்மை தத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் ஆனால் ஒருசில அடிப்படைகளை அறிதல்வேண்டும் மனிதமனம் மிகமிக விந்தையானது. ஓர் இடத்தில் இருக்கும்பொழுது மற்றோர் இடம் இதைவிடச் சிறப்புடையது என்று நினைத்து சஞ்சலப்படுதல் மனித மனத்தின் இயல்பாகும். இரண்டாவது, சங்கப் பாடல்களில் வரும் பாலைத்திணைப் பாடல்களை ஆராய்ந்தால் அவற்றிலிருந்து ஒன்றை அறியமுடியும். கற்புக் காலத்தில் தலைவியோடு இருக்கும்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆற அமர சிந்திப்பதற்கு சமயம் கிடைப்பதில்லை. கல்விவயின் பிரிவு, பொருள் வயின் பிரிவு, போர்வயின் பிரிவு என்ற ஏதோவொரு காரணத்தால் தலைவியைவிட்டு, நெடுந்துாரம் சென்று விட்ட தலைவன் அங்குள்ள அன்றாடப் பணிகளை