பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சேக்கிழார் தந்த செல்வம் முடித்தபிறகு, ஒய்வாக இருக்கும்பொழுது தலைவியோடு செலவழித்த காலத்தையும், அவள் பேசிய பேச்சுக்களையும், அவர்களிடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் மெல்ல அசைபோட்டு EFTG) i தானமாக சிந்திப்பது மரபாகும். பாலைத்திணை பாடல்கள் பல இங்கு கூறியவற்றை விளக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன் அடிப்படை யாது? என்றோ நடந்த ஒன்றை, வேறொரு சூழ்நிலையில் இருக்கும்பொழுது ஆற அமர சிந்திப்பது மனித மனத்தின் பண்பாகும். இவ்வாறு நினைந்து அவன் அசைபோடுவதால் தலைவன் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று நினைப்பதும், கூறுவதும் மனவியல் அறிந்தார் ஏற்றுக் கொள்ளாத ஒன்றாகும். அமைதியாக இருக்கும் பொழுது பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பதை Remembering in Tranquility என்று மேனாட்டார் கூறுவர். r மனித மனத்தின் அமைப்பில் தவிர்க்கமுடியாத - ஒரு பகுதியாகும் இது. நாவரசரின் வாழ்க்கையை இப்பொழுது நினைவுக்கு கொண்டுவருதல் நலம். பெருஞ்செல்வர் இல்லத்துப் பிறந்த ஒரே மகனார். மிகக் குறுகிய காலத்தில் மூன்று சாவுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து அந்த இளைஞன் மனத்தை உலுப்பிவிட்டன. தம்மிடம் உள்ள இப்பெருஞ் செல்வம் இம்மூன்று துன்பங்களில் ஒன்றைக்கூட h விலக்கப் பயன்படவில்லை என்ற எண்னம்