பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 195 அதிர்ச்சியைத் தந்ததோடல்லாமல் இந்தச் செல்வம், இந்த வாழ்க்கை என்பவை அனைத்தும் நீர்க்குமிழி போன்று நிலையில்லாதவை என்ற முடிபுக்கு அவரை உந்தித் தள்ளிற்று. இத்தகைய முடிபு உலகத்தில் பலருக்கும் வருவதுண்டு. மன ஊற்றம் இல்லாத காரணத்தாலும் இன்ப நாட்டம் கொண்ட காரணத் தாலும் இந்த முடிவின்படி யாரும் நடந்துகொள்வ தில்லை. இதனை நம் முன்னோர் மயான வைராக்கியம் என்று கூறினர். ஒரு வினாடி மனத்தில் தோன்றி உடன் மறைந்துவிடுகின்ற இதனை மயான வைராக்கியம் என்று கூறுவதில் தவறில்லை. இத்தகைய மனிதரிலிருந்து, முற்றிலும் மாறு பட்டவர் புகழனாரின் மகனான மருள்நீக்கியார், நிலையாமையைக் கண்கூடாகக் கண்ட அவர் இது தமக்குமட்டும் சிறப்பாக நிகழ்ந்ததன்று, உலகம் முழுவதற்கும் பொதுவானது என்பதை அறியச் சில காலம் பிடித்திருக்கும். தம்முடைய செல்வத்தை மக்கள் தொண்டில் ஈடுபடுத்தியபோதும், பல்வேறு கலைகளைக் கற்றபோதும் மனத்தில் அமைதி நிலை பெறவில்லை என்பதை அறிந்த அவர், இந்தச் சாவுகளின் மூலம் நிலையாமை என்ற ஒன்றுபற்றி அதிகம் சிந்திக்கலானார். இதைக் கூறவந்த சேக்கிழார், நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து, சமயங்கள் ஆனவற்றின்