பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 197 சமயங்கள் கூறுவனவற்றை சமையிகள் அனைவரும் கடைபிடிக்கிறார்கள் என்று நினைப்பதும் சொல்வதும் அறியாமை உடையதாகும். எந்தச் சமயத்தில் வாழ்பவர்களும் அந்தச் சமயம் கூறும் விதிமுறை களைப் பின்பற்றி வாழ்ந்தால் சமயப் பூசலுக்கு இடமே இல்லை. அன்பையே அடிப்படையாகக் கொண்டு வளர்த்த ஏசு பெருமானின் சமயத்தார் அன்று முதல் இன்று வரை செய்த, செய்கின்ற போர்களுக்கு ஒரு முடிவே இல்லை. அச்சமயத்தில் தோன்றிய கிளைச் சமயங்கள் தம்முள் போரிட்டு மடிந்த வரலாற்றை உலகம் அறியும். சமையிகள் (சமயத்தைப் பின்பற்றுவார்கள்) சரியாக நடந்து கொள்ளாமையால் அச்சமயத்தைக் குறை கூறுவது அறியாமையின் பாற்படும். சமயம் என்பது வேறு, சமயிகள் என்பவர்கள் வேறு. கொல்லாமையே முழு மூச்சாகக் கொண்ட தமிழ்ச் சமணர்களிடையே வந்தேறிகளான களப்பிரர் தாங்களும் சமணர் என்று கூறிக் கொண்டாலும் கொலைக் கொள்ளை என்பவற்றையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். இந்த நுணுக்கத்தையும், தமிழ்ச் சமணர்களினின்று களப்பிரர் மாறுபட்டவர்கள் என்பதையும் நன்கு அறிந்த சேக்கிழார், கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் என்று கூறுகிறார். இந்த வேறு பாட்டை உணர்த்தவே ஞானசம்பந்தர், நாவரசர், சேக்கிழார் ஆகிய மூவரும் சமணர் என்ற சொல்லைப்