பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சேக்கிழார் தந்த செல்வம் பயன்படுத்தாமல், அமணர் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர். மேலும், தமிழ்ச் சமணர் அரசியலில் புகுந்ததாக, அரசர்களை ஆட்டி வைத்ததாக வரலாறே இல்லை. எனவே, நாவரசர் புகுந்த அமண் சமயத்தார், பல்லவ மன்னனாகிய மகேந்திரனை கைக்குள் போட்டுக் கொண்டு, புறத்தே இருந்து தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர் என்பதை அறியலாம். அத்தகையோர் வட்டத்தில்தான் வாகீசர் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தாலும் தொடக்கத்தில் அவர்கள் உடைய மறைவு வாழ்க்கை அறியாமல் அச்சமயக் கொள்கை களில் ஈடுபட்டார். வாய்மை, கொல்லாமை முதலிய அவர்களுடைய கொள்கைகள் நாவரசரை ஈர்த்ததில் வியப்பில்லை. ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் சைவ சமயத்தில் பலர் ஊன் உணவை மேற் கொண்டு இருந்தனர். இவ்வாறு உண்பது சரியா தவறா என்ற போராட்டம் சைவர்களிடையே இருந்து வந்தது என்பதை 'ஊனொடு உண்டல் நன்றென, ஊனொடு உண்டல் தீதென' என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம் இதை விளக்கும். அன்றியும் முன்னரே தமிழகத்தில் புகுந்த வைதிக சமயம் கொலை வேள்வியை ஏற்றுக்கொண்டதாதலின் அந்த வைதிக சமயம் தமிழகத்தைத் தாக்கியபொழுது சைவர்களும் ஒரளவு வேள்வியில் ஈடுபட்டனர். 'பசுவேட்டு எரி