பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 199 ஒம்பி என்ற சம்பந்தர் தேவாரம் இதற்குச் சான்றாகும். இவற்றை ஏற்காத சைவர்களும் இருந்தனர் என்பது தெளிவு. - நாவரசருக்கு ஊன் உணவு, வேள்வி என்ற இரண்டும் கட்டோடு பிடிக்கவில்லை. இதனை வேதம் ஒதில் என் வேள்விகள் செய்யில் என்’ என்ற திருக்குறுந்தொகைத் தேவாரம் அறிவிக்கும். ஆகவே, கொலை வேள்வியை மறுத்தல், அஹிம்சை என்ற இரண்டுக்கும் தலைமையிடம் தந்த சமண சமயம், வாகீசரை ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. முழு மனத்தோடு, முழு நம்பிக்கையோடு சமண சமயத்தில் அவர் புகுந்தார் என்பதில் ஐயத்திற்கு இடமே இல்லை. - அப்படியானால், அங்கே சென்றபிறகு இந்த நம்பிக்கை தளர்வுற்றதா என்ற வினாவை எழுப்பினால், 'ஆம்’ என்றே விடை கூறவேண்டும். எந்தக் கொலையை வெறுத்து, எந்த அஹிம்சையில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தில் புகுந்தாரோ, அந்தச் சமயத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அந்த அமணர்கள் களப்பிரர்கள் இவை இரண்டையும் கூசாமல் மறைவாகச் செய்வதைக் கண்டவுடன் மருள்நீக்கியாருக்கு மன வருத்தம் தோன்றலாயிற்று, அல்லாமலும், அவர் பிறந்ததிலிருந்து வளர்ந்து புறச்சமயம் செல்கின்றவரை அவருடைய மனத்திலும் பரம்பரையிலும் ஊறிப்போயிருந்த