பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சேக்கிழார் தந்த செல்வம் கடவுட் கொள்கைக்குப் புதிய சமயத்தில் இடமில்லை. அவர் மனத்தில் ஆழ்ந்து படிந்திருந்த கடவுட் கொள்கையும் களப்பிரர் வாழ்க்கையில் காணப்பட்ட ஹிம்சை, கொலைவெறி என்பவற்றில் ஏற்பட்ட வெறுப்பும் அவரைச் சிந்தனையில் ஆழ்த்தின. ஏதோ ஒரு வேகத்தில் அமண் சமயம் குறுகினார். மாபெரும் அறிவாளி ஆதலின் அச்சமயத்தின் உண்மையான கொள்கைகளை அறிந்து, பிற சமயங்களை வெற்றி கொள்ளும் சிறப்பையும் பெற்றார். அச்சமயத்தின் உண்மையான தத்துவங்களிலும் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டிருப்பினும் அவர் மனத்தில் இரண்டு குறைகள் தோன்றலாயின. முதலாவது, அந்தச் சமயம் கூறும் நல் உபதேசங் களையும் நல்லுரைகளையும் அந்தச் சமயிகள் பின் பற்றவில்லை என்பது முதற்குறையாகும். ஏனைய சமயத்தார் போலவே இவர்களும் பேசும் கொள்கை வேறாகவும், நடைமுறை வேறாகவும் இருப்பதில் ஏற்பட்ட குறை முதற்குறையாகும். இரண்டாவது, மனத்தில் இளமையிலிருந்து ஊறிய கடவுட் கொள்கை, வழிபாட்டு முறை என்பவற்றை இடையே விட்டுவிட்டதால் ஏற்பட்டது இரண்டாவது குறை. விரும்பிச் சென்றடைந்த புதிய சமயத்தில் காணப் படும் முரண்பாட்டால் மனத்தில் வியப்பும் தளர்ச்சி யும் ஏற்பட்டன. அமைதியாக அதுபற்றிச் சிந்திக்கும் பொழுது பழைய சமயத்தில் தாம் மேற்கொண்டிருந்த