பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சேக்கிழார் தந்த செல்வம் கைத்திருத் தொண்டு செய்கடப்பாட்டினார் தொண்டு செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர் நாவரசர் என்பது முன்னமே குறிக்கப் பட்டுள்ளது. அவர் செய்த உழவாரத் தொண்டும், திருப்பூந்துருத்தியில் நீண்ட காலம் தங்கிச் செய்த திருக்கோயில் தொண்டும் மக்கள் தொண்டே ஆகும் என்பதையும் அறிதல் வேண்டும். இவற்றை அல்லாமல் திருவிழிமிழலையில் நடைபெற்ற நிகழ்ச்சி இப்பெருமானார் மக்கள்மாட்டு கொண்டிருந்த எல்லையற்ற அன்பிற்கும் செய்த பணிக்கும் எடுத்துக் காட்டாகும். எழுபது வயது நிரம்பிய நாவரசரும் பத்து வயது நிரம்பிய ஞானசம்பந்தப் பெருமானும் இறைவனை மனக் கண்களால் அன்றி, ஊனக் கண்களாலும் பார்த்து வழிபடும் பெருமை உடையவர்களாயினும், தம்மைச் சுற்றியுள்ள மக்கள் வாழ்க்கையை இவர்கள் மறப்பதே இல்லை. இப் பெருமக்கள் இருவரும் திருவிழிமிழலையில் ஒருமுறை வந்து சேர்ந்தனர். . தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கூறப்பெறும் அப்பகுதியில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இப் பஞ்சம் இயற்கையானதாகத் தோன்றவில்லை. வணிகர் களின் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட செயற்கைப் பஞ்சம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அந்நிலையில் திருஞானசம்பந்தப் பெருமானோ அன்றி அப்பர் பெருமானோ இறைவனை வேண்டி