பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 203 ஒரு பதிகம் பாடித் தேவையான மழை தருவித் திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இறைவனை வேண்டி, அவனருளால் ஆளுக்கொரு பொற்காசு பெற்று உணவுப் பண்டங்களை வாங்கி ஊரின் இரண்டு கோடிகளிலும் இரண்டு மடங்களை அமைத்து, மக்கள் பசிப்பிணியைப் போக்கினர். பொற்காசைக் கண்டவுடன் வணிகர்கள் வேண்டு மான பொருட்களைத் தந்தார்கள் என்றால், இப் பொருட்கள் அதுவரை எங்கே இருந்தன: பொருட்களை மறைத்து வைத்துக்கொண்டு, அதிக விலைக்குப் பொருட்களை விற்க விரும்பிய வணிகர்களின் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பெற்ற பஞ்சம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இரு பெருமக்களும் ஒன்றாகத் தங்கியிராமல் ஊரின் இரண்டு கோடிகளிலும் மடம் அமைத்து, உணவு சமைத்து மக்கள் பசிப் பிணியைப் போக்கக் காரணம் யாது! ஒன்றாக இருந்து ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்கியிருக்கலாம். அதை விட்டு விட்டு இரண்டு இடங்களில் தனித் தனியே உணவு சமைக்கக் காரணம் யாது என்பதை ஆராய்ந்தால், இப் பெருமக்களும் மக்கள்மாட்டுக் கொண்ட அன்பும் தொண்டின் சிறப்பும் வெளிப்படும். - - - - - . . கோடை കെഥി ஒரே இடத்தில் அமைந்துள்ள மடத்திற்கு வரவேண்டுமானால் நீண்ட