பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சேக்கிழார் தந்த செல்வம் தூரம் நடக்க நேரிடும். அவ்வாறு நடைபெறாமல் இருக்கவே இரண்டு இடங்களில் மடம் அமைத்து உணவு இட்டனர். பொதுவாக இவ்வாறு அறஞ் செய் பவர்கள் ஏவுதல் கர்த்தாவாக இருந்து, இப்பணியைத் தொடங்கியவுடன் அத்தோடு அதுபற்றிக் கவலைப் படாமல் இருந்துவிடுவர். இந்த இரண்டு பெரு மக்களில் சிறிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார் காலா காலத்தில் உணவு தயாரிக்கப் பெற்று நன்முறையில் வழங்கப்பெறுகிறதா என்பதை விடாமல் மேற்பார்வை பார்த்துக்கொண் டிருந்தார் என்று அறிகிறோம். நாவரசர் மடத்தில் உரிய காலத்தில் உணவு வழங்கப்பெற்றும், தம்முடைய மடத்தில் காலந் தாழ்ந்து உணவு பரிமாறப்படுகிறது என்பதை அறிந்த பிள்ளையார் அதன் காரணத்தை அறிய விரும்பினார். தமக்குக் கிடைக்கும் காசு மாற்றுக் குறைந்திருப்பதும் நாவரசர் காசு ஆணிப்பொன்னாக இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. ஒரு வினாடி இந்த வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்று சிந்தித்த பிள்ளையாருக்கு உடனே உண்மை விளங்கி விட்டது. மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் இறைத் தொண்டு செய்ய வேண்டும் என்பது இந் நாட்டின் தலையாய கொள்கையாகும். தலை மகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர் மனத்தாலும் வாக்காலும் இறைத் தொண்டு செய்தாரே தவிர உடலால் எதுவும் செய்ததாக