பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 205 வரலாறு இல்லை. அவருடைய மிக இளமைப் பருவம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும், இறைவனுடைய கணக்கில் இரண்டால் (மணம், மொழி தொண்டு செய்பவர்களை விட, மூன்றால் (மனம், மொழி, மெய்) தொண்டு செய்பவர் முழுத் துய்மை பெறுதற்குரியவராகிறார். "கைத் தொண்டு ஆகும் பான்மையினால் வாசி இல்லாக் காசு பெற்றார் வாகீசர்" என்ற உண்மையை ஒரே வினாடியில் அறிந்துகொண்டார் ஞானசம்பந்தர் என்கிறார் சேக்கிழார். இந்நாட்டுச் சைவப் பெருமக்கள் தொண்டுக்குக் கொடுத்த தனிச் சிறப்பு இதுவாகும். - . இங்கே ஓர் ஐயம் தோன்ற இடமுண்டு மாபெரும் சக்தி வாய்ந்த இப் பெருமக்கள் இருவரும் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடி வினாடி நேரத்தில் மழையை வருவிக்கும் ஆற்றல் உடையவர்கள்தாமே! அப்படி இருக்க, மழையை வரவழைத்துப் பஞ்சத்தைப் போக்காமல் சோறிட வேண்டிய காரணம் என்ன என்ற வினாவுக்கு வேறொரு விளக்கமும் காணலாம். இப்பொழுதே மழையை வர வழைத்தாலும் பயிர்கள் விளைந்து பயன்தர மூன்று மாதங்கள் ஆகும். வருகின்ற மழை உடனடியாக அவர்கள் பசிப் பிணியைப் போக்க உதவாது. எனவே தான் பஞ்சம் தீர்கின்றவரையில் உணவிட்டார்கள் என்பதை அறி கிறோம். இவ்வளவு உயர்ந்த நிலையில் இறைவனை நேரே காணும் வாய்ப்பு உடையவர்களாயினும்