பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 சேக்கிழார் தந்த செல்வம் —r சாதாரண மக்கள் வாழ்வில் நாவரசர் போன்றவர்கள் எவ்வளவு கவனம் செலுத்தினார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டாகும். . திருவுருவ விளக்கம் மாபெரும் அறச்செயல்களைச் செய்தும் நற்பெயர் எடுத்தும் பிற சமயம் சென்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றும் மீட்டும் சைவத்திற்கு வந்து நஞ்சூட்டல், கடலில் எறியப்படுதல் ஆகியவற்றி லிருந்து வெற்றியோடு மீண்டதன் மூலம் செயற்கரும் செயல்களைச் செய்த நாவரசர் பெருமானின் தனி வாழ்க்கை ஈடு இணையற்ற முன்றயில் அடக்கத்திற்கே கொள்கலமாய் இருந்ததைக் கிளிண்கிறோம். பல்லவன் ஏவலன் வந்து தம்மை அழைத்தபொழுது நாம் யாருக்கும் அடிமை இல்லை என்று கூறி, வர மறுத்துவிட்டார் பெருமான். ஆனால், அதே நேரத்தில் அவரை அழைத்துச்செல்லாமல் சென்றால் தங்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்று ஏவலர் கூறியவுடன் அவருடன் செல்ல உடன்பட்டார். அரசன் ஆணையை மறுக்கும் நெஞ்சுரம் உடையவர் ஆயினும் சாதாரணமானவர்களும் அப்பாவிகளுமான ஏவலர் தண்டன்ை பெறுவதைப் பெருமான் பொறுக்கத் தயாராயில்லை. சாதாரண மக்கள்மாட்டு அவர் கொண்டிருந்த மனித தேய்ம் அளவிடற்பா ) தன்று.