பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 207 வாழ்க்கை அனுபவங்கள் இந்த இறை நேசரை வெறும் பக்தராகமட்டும் ஆக்காமல் தலைசிறந்த மனித நேயம் உடையவராகவும் மாற்றிவிட்டது. அதன் பயனாகத்தான் தமக்குத் தீங்கு செய்தவர்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. உடல் பொருள், ஆவி அனைத்தையும் ஈசன்பால் வைத்தமையின் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அனுபவ பூர்வமாக அறிந்துவிட்டார். மனித நேயம் வளர அதுவும் ஒரு காரணமாயிற்று இவருடைய மனவளர்ச்சி அவருடைய முகத்திலும் பிரதிபலித்தது என்பதைக் கடலிலிருந்து கரையேறி திருப்பாதிரிப்புலியூரை வணங்கிவிட்டுத் திரு வதிகைக்குள் பெருமான் நுழையும் போதுச் சேக்கிழார் இதோ படம் பிடித்துக் காட்டுகிறார். தூய வெண்ணிறு துதைந்தபொன் மேனியும் - தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துஉருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் - செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே. (பெயு-1410) இப்பாடலின் முதலடியில், பெருமானின் பருவுடல் வருணிக்கப்படுகிறது. பொன் மேனியில் வெண்ணிறு பூசப்பட்டிருத்தலின் சிவபெருமானை நினைவூட்டு வதாக அது அமைகிறது. இரண்டாவது அடியில் அவருடைய மனத்தைப் படம் பிடிக்கிறார்