பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சேக்கிழார் தந்த செல்வம் பேரரசு அந்த உச்ச கட்டத்தில் இருக்கும்பொழுது தான் அதன் ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டது. குலோத்துங்கனுக்குப் பிறகு இரண்டு தலை முறைகளில் சோழப் பேரரசு காணாமல் போய் விட்டது. ஆணிவேர் ஆட்டங் கண்ட் துணுக்கத்தை யாரும் அறியவில்லை, தலைமை அமைச்சரான சேக்கிழாரைத்தவிர பரந்து விரிந்த இந்தச் சாம் ராச்சியத்தைத் தலைமை அமைச்சர் எத்தனை முறைச் சுற்றிப் பார்த்தாரோ என்பதை நாம் அறியோம். ஆனாலும் ஒன்று மறுக்க முடியாத உண்மை. தேனும் பாலும் பெருக்கெடுத்தோடிய இந்தக் காலகட்டத்தில் செல்வம், அதிகாரம் என்ற இரண்டும் மிதமிஞ்சி இருந்தது என்பது உண்மைதான். இவை இரண்டின் பெருக்கமே அழிவிற்கு வித்திட்டது என்பதைச் சேக்கிழார் அறிகிறார். இந்த நிலையில் கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கிலக் கவிஞனின் பாடல் வரி நினைவிற்கு adjāng). Where wealth accumulates, men decay” என்பதே அந்த வரியர்கும். எங்கே செல்வம் மிதமிஞ்சிச் சேர்கிறதோ அங்கே மனிதர்கள் அழுகிப் போய்விடுகிறார்கள் என்பதே அந்த வரியின் பொருளாகும். 4. & ; : புற வளத்தில் (அதிகாரம், செல்வம் மேம்பட்டு நின்ற சோழ சாம்ராச்சியத்தில் வாழ்ந்த மக்களின் மனத்தில் அக வளம் வற்றிவிட்டது. என்பதைக் கண்டு கொண்டார். る நுண்மாண் நுழைபுலம் மிக்க