பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சேக்கிழார் தந்த செல்வம் கவிஞர். இறைவனின் திருவடியை வருடுவதுபோல அவருடைய சிந்தை ஆகிய வண்டு, இறைவன் திருவடியாகிய மலரை ஓயாது சுற்றிவருவதை ‘நாயகன் சேவடி தைவரு சிந்தை' என்ற சொற்களால் தெய்வச் சேக்கிழார் எடுத்துக்காட்டுகிறார். இங்கு மனம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், சிந்தை என்று கூறியதால் பெருமானுடைய மனம் முழுவதும் திருவடியால் நிரம்பி, ஆழத்தில் இருக்கும் sepudaorégog, (deeper consciousness) 6TGäg|3; கூறுகிறார். ஆழ் மனம் இப்பணியில் ஈடுபட்டதால் அந்த உணர்வோடு தொடர்புடைய கண்கள், கண்ணிரைத் தாரை தாரையாகப் பெருக்குகின்றன. இரண்டடிகளில் மனம், மெய் என்ற இரண்டையும் கூறிவிட்டதால், எஞ்சியுள்ள மொழியைப்பற்றி மூன்றாவது அடியில் பேசுகிறார். பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும் என்று கூறுவதால் அவருடைய மொழியும் தன் பணியை இறைவன்மாட்டுச் செலுத்துகின்றது என்பதையும் தெரிவித்தார். 'செஞ்சொல் மேய செவ்வாய்’ என்றதால் பெருமானின் வாய் பதிகச் செஞ்சொல் பேசுமே தவிர, வேறு ஒன்றையும் பேசாது என்பதையும் குறிப்பாக உணர்த்திவிட்டார். . . . . . " ... . .” இந்த வருணனை இடர்களையெல்லாம் வென்று, மனித நேயத்தைப் பூரணமாகப் பெற்று முழு வளர்ச்சி அடைந்த ஒரு முழு ஆன்மிக வாதியைத்